தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பூனத்தனஅள்ளி, குட்டூர் ஆகிய கிராமங்களில் மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தனிடம் அப்பகுதிமக்கள்  கோரிக்கை மனு  அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மாதேமங்கலம் ஊராட்சியில் வெங்கட்டம்பட்டி, புதூர், மாதேமங்கலம் ஆதிதிராவிடர் காலனி, குட்டூர் பாளையத்தனூர், ஆவராங்காட்டூர், தம்மணம்பட்டி, கோடி அள்ளி ஆகிய 8 கிராமங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அரசு-தனியார் பள்ளிகள் அமைத்துள்ளன. பெரும்பகுதி மக்கள் சிறுவிவசாயிகளுகும், கூலிதொழிலாளர்களும், அதிகம் வாழும் பகுதியாகும். பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய பகுதி , படித்துவிட்டு பெரும்பாலன இளைஞர்கள் வேலைவாய்பு இல்லாமல் தினக்கூலிவேலை செய்துவருகின்றனர். இப்பகுதியில் மதுவினால் பலகுடும்பங்கள் சீரழிவுஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாதேமங்கல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் அரசுமதுபானக்கடை திறப்பதற்கு அதிகாரிகள் இடம்பாரத்து சென்றுள்ளதாகத் தெரிகிறது. இப்பகுதியில் மதுபானக்கடை திறந்தால் பொருளா தாரம் பாதிக்கபடும். சமூக ஒற்றுமை சீர்குலையும், பெண்கள் மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விகுறியாகும் எனவே இப்பகுதியில் மதுபானக்கடையை திறக்கும் முயற்சியை கைவிடவேண்டும்.

காரியமங்கலம் வட்டம் பெரியாம்பட்டியில் செயல்பட்டுவரும் அரசுமதுபானக்கடையை மூடிவிட்டு பூதானஅள்ளி கிராமத்தின் அருகே மதுபானக்கடையை அமைக்கும் முயற்சியை அரசு செய்துவருகிறது. எனவே மக்கள் நலன் கருதி  இப்பகுதியில் மதுபானக் கடையை அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave A Reply