பனாஜி ,

மத்திய ராணுவ அமைச்சரான மனோகர் பாரிக்கர் , கோவாவின் முதல்வராக பதவி ஏற்பதற்கு பாஜக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் கோவா மாநில ஆளுநரை மிருதுளா சின்ஹாவை சந்தித்து , தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சமர்ப்பித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

இதை தொடர்ந்து ஞாயிறன்று நள்ளிரவில் கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கரை நியமனம் செய்து , ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, ஆளுநரின் செயலாளர் ரூபேஷ் குமார் தாகூர் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகர் பாரிக்கரை முதல்வராக ஆளுநர் நியமனம் செய்து உள்ளார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மையை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்கிறார். முதல்வராக பொறுப்பேற்கும் மனோகர் பாரிக்கருக்கு கவர்னர்  பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதன் காரணமாக அவர் தனது ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: