ராமேஸ்வரம் ,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவர்கள் இன்று 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

இலங்கை கடற்படையால்  தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில், 6ஆவது நாளாக போராட்டம் நீடித்துவருகிறது. பிரிட்ஜோவின் உடலைப் பெற மறுத்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மீனவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதேபோல் , மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து வேதாரண்யம் அருகே மீனவர்கள் 4 வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்திலும்  மீனவர் ப்ரிட்ஜோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழையாறு துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply