ராமேஸ்வரம் ,

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக மீனவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். இன்று மத்திய இணையமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்காரர்களை சந்தித்து , இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என கூறி , போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார். மேலும் மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Leave A Reply