ஜெனீவா,

இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் 17 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசடைவதால் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார மையம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 5 வயதுக்கு கீழ் உயிரிழக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தை சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி,

►5.7 லட்சம் குழந்தைகள் காற்று மாசினால் உயிரிழந்துள்ளனர்.

►3.6 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

►2.7 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திலே உயிரிழந்துள்ளனர்.

►2 லட்சம் குழந்தைகள் நச்சு வாயு, நீரில் மூழ்குவது போன்ற விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.

►2 லட்சம் குழந்தைகள் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வளர்ந்து வரும் எந்திர உலகில் மின்னணுக் கழிவுகளாலும் குழந்தைகள் கவனப்பற்றாக்குறை, நுரையீரல் பாதிப்பு , புற்றுநோய் போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் உயிரிழப்பதற்கான முக்கியக் காரணிகளாக காற்று மாசு, சுத்தமான குடிநீர் வசதி இல்லாதது, குழந்தைகள் மத்தியில் புகை பிடித்தல், நச்சுக் கழிவுகள், புற ஊதா கதிர்வீச்சு, நச்சு கலந்த ரசாயன பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: