செங்கல்பட்டு,
உலக மகளிர் தினத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் எய்ட் இந்தியா அமைப்பும்மும் இணைந்து சனிக்கிழமையன்று (மார்ச் 11) மாமல்லபுரம் கடற்கரை புலிக்குகை வளாகத்தில் கொண்டாடியது.
மாதர் சங்க திருப்போரூர் வட்டச் செயலாளர் வி.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் வி.பிரமிளா, துணைச் செயலாளர் பி.ஜெயந்தி, எய்ட் இந்தியா ஒருங்கிணைப்பாளர்  டிகே.அன்பழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் புதுவினை கலைக்குழுவின் சார்பில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது. நிகழச்சிக்கு வந்திருந்த ஏராளமான பெண்கள் கலை நிகழ்ச்சிகளை  உற்சாகத்துடன்  கண்டுகளித்தனர். மேலும்  கலந்து கொண்ட பெண்களுக்கு கயிறு இழுத்தல், கோலப்போட்டி, லெமன்ஸ்புன், இசைநாற்காலி, குழந்தைகளுக்கு சாக்குப்பை ஓட்டம், ஓட்டப்பந்தயம்  உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திருப்போரூர் புதுவினை கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணகி, செல்வம், சுயஉதவிக்குழு நிர்வாகிகள் ஏ.காயத்திரி, எஸ்.கோமதி, கவிதா, ஏ.ஜெயலட்சுமி, ராணி இ.அலமேலு, எச்.வனிதா, கே.நித்தியா, எல்.கலையரசி, எப்.கோகிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: