இம்பால் ,

மணிப்பூரில் அம்மாநிலம் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்ட இரோம் சர்மிளா தோல்வியடைந்தார்.

மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா. அவரது 16 ஆண்டு கால போராட்டம் வெற்றி பெறாததை அடுத்து , கடந்த வருடம் உண்ணாவிரதத்தை கைவிட்ட அவர் , ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கும் திட்டத்தில் அரசியலில் குதித்தார்.

தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரோம் சர்மிளாவின் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அம்மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதி மற்றும் குராய் தொகுதியிலும் இரோம் சர்மிளா போட்டியிட்டார். ஆனால் இந்த 2 தொகுதிகளிலும் அவர் தோல்வியடைந்தார்.

இது குறித்து அவர் , நான் தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்கள் என எண்ணினேன். எல்லோரும் தங்களது படைபலம் மற்றும் பணபலத்தை வெளிப்படையாக காட்டினார்கள். நாங்கள் 2019 ஆம் ஆண்டுப் தேர்தலில் முயற்சி செய்வோம் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.