பஞ்சாப் மாநிலம் சண்டிகர் கண்டோன்மென்ட் தொகுதியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்கத் சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து களம் இறங்கிய சிரோமணி அகாலி தளத்தின் சரப்ஜித் சிங் மக்காரைவிட 29,124 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அந்த தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார்.
பர்கத் சிங்கிற்கு 59,349 வாக்குகளும், சரப்ஜித் சிங்கிற்கு 30,225 வாக்குகளும் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஹர்கிஷன் சிங் வாலியா 25,912 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
2012ம் ஆண்டு தேர்தலில் சிரோமணி அகாலி தளம் சார்பில் பர்கத் சிங் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து மீண்டும் போட்டியிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.