தருமபுரி,
சட்டமன்றத்தில் அறிவித்தப்படி கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வலியுறுத்தி யுள்ளனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 6 வது மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் ஜி. சதீஸ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் துவக்கிவைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் இரா. ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எம். வடிவேல் வேலை – அறிக்கை வாசித்தார். பொருளாளர் நா. ருத்ரையன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்டமுகமை இயக்குனர் மா. காளிதாசன், முன்னாள் மாவட்டத் தலைவர் என். இராமஜெயம், பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சிவப்பிரகாசம், அரசு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை சங்க மாநிலப் பொருளாளர் கே. புகழேந்தி, வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் யோகராசு ஆகியோர் வாழ்த்திப பேசினர்.
இதனைத் தொடர்ந்து மகளிர் மாநாடு நடைபெற்றது. எம். ராஜாசேகர் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்:

மாவட்டத் தலைவராக மா. மணிவண்ணன், செயலாளராக ச. இளங்குமரன், பொருளாளராக பா.சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உதவி இயக்குனர், இணை இயக்குனர் கூடுதல் இயக்குநர்  காலிப்பணியிடங்களை பதவி உயர்வு வழியாக நிரப்பிடவேண்டும், இவர்களுக்கு பணிமாறுதல்கள் வெளிப்படையாக பாகுபாடு இன்றி வழங்க வேண்டும், கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  என்பன  உள்ளிட்ட 20 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14 அன்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply