திண்டுக்கல்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அச்சம் தவிர் என்ற தலைப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக்அலி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராஜசேகரன் மாவட்ட தணிக்கையாளர்கள் பா.சந்திரா பஞ்சவர்ணம் மற்றும் வசந்தா லட்சுமி மாவட்ட மகளிர் துணை குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, ஈஸ்வரி, இந்திராணி, அனிதாரூபி, வசந்தா சீதாலட்சுமி, புவனேஸ்வரி, சந்தானலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.