கோவை,
கோவை ஈஷா யோகாமையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் குளித்த ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து சுற்றுல்லா வந்த 10 பேர் இன்று ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள சூரிய குண்டத்தில் குளித்தால் நல்லது நடக்கும் என  ஈஷா யோகமைய ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய சுற்றுலா பயணிகள் அந்த சூரிய குண்டம் என்றழைக்கப்படும் குளத்தில் மூழ்கி குளித்திருக்கின்றனர். அப்போது ஒரு இளைஞர் மூச்சுதிணறியிருக்கிறார். இதையடுத்து அங்கு ஆபத்து என கத்தியிருக்கின்றனர். ஆனால் ஜக்கியோ சத்குருவோ வரவில்லை. மேலும் அங்கிருந்த ஈஷா ஊழியர்களாலும் காப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் அந்த இளைஞர் உடன் வந்தவர்களின் கண்முன்பு துடிதுடித்து இறந்திருக்கிறார். பின்னர் விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து வந்த பத்தர்கள் என்றும், இறந்தவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ரமேஷ் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.