தருமபுரி,
தோழி கூட்டமைப்பும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து சர்வதேச பெண்கள் தினவிழாவை தருமபுரியில் கொண்டாடின. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். தோழி கூட்டமைப்பின் நிர்வாகி எம். மகாலட்சுமி வரவேற்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் எஸ்.சங்கரி, தோழி கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் எம். சங்கர், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.மல்லிகா,  கே.பூபதி, ஏ.ஜெயா, பி.கிருஷ்ணவேணி, அன்பு, தனலட்சுமி  ஆகியோர் கருத்துரையாற்றினர்.

செபரான் பெண்கள் தொழிற் பயிற்சி பள்ளி இயக்குநர் சுனுசைன், விவேகானந்தா செவிலியர் கல்லூரி இயக்குநர் வசந்தராணி, ஆக்ஸீலியம் பள்ளி தாளாளர் நிர்மலா, ஜூசஸ் கிரைஸ்ட் மகளிர் கல்லூரி இயக்குநர் வி. புளோரா ஜெனிபர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி..சுகந்தி, பேசுகையில், “தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு 8 மணி நேர வேலை, ஓட்டுரிமை என பல போராட்டங் களின் விளைவாகத்தான் கிடைத்தது. போராடி பெற்ற வாக்குரிமையை விலைக்கு விற்கும் அவல நிலை உள்ளது” என்றார்.
படம் உள்ளது.

Leave A Reply