அம்பேத்கர் சிலையை அகற்றாமல் தேரோட்டம் வேதாரணியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் போராட்டம் வெற்றி

புகழ் பெற்ற வேதாரணியம் வேதாரணீஸ்வரர் திருக்கோயில் பெரிய தேரோட்டம், 60 ஆண்டுகளுக்குப் பின், பேருந்து நிலையத்தின் வடப்புறம் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அகற்றப்படாமல், வியாழன் அன்று நடைபெற்றது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் வேதாரணியம் மக்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.1995-ஆம் ஆண்டு, வேதாரணியம் நகராட்சிப் பேருந்துநிலையத்தின் வடப் புறத்தில்மாமேதை டாக்டர் அம்பேத்க ரின் முழு உருவச் சிலை அமைக்கப் பட்டது. இந்தச் சிலையை அப்போது மத்திய அமைச்சராக இருந்த அருணாச்சலம் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்தபிப்ரவரி-2 அன்று, வேதா ரணீஸ்வரர் கோயில் தேரோட்டத் திற்கான வெள்ளோட்டம் நடை பெற்றது. அதற்கு முன்பும், பின்பும், மாவட்ட நிர்வாகமும் வட்டாட்சி நிர்வாகமும் தேரோட்டத்திற்கு அம்பேத்கர் சிலை இடையூறாக இருக்கும் என்ற காரணத்தைக் கூறிக் கொண்டு காழ்ப்புணர்ச்சி மற்றும் சாதிய உள் நோக்கத்தோடு, எப்படியாவது அம்பேத்கர் சிலையை அகற்றிவிடப் பலமுறை முயன்றன.

இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து அம்பேத்கர் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதற்கிடையே, அரசுநிர்வாகம், உயர்நீதி மன்றத்திலும் ஓர் ஆணையைப் பெற்றுத் தயாராய் வைத்திருந்தது. அதாவது, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொள்ளு மாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, அரசு நிர்வாகம் சிலையை அகற்றிவிடலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. இரவுபகலாக, சிலைக்கு ஏதும் நடந்து விடாதவாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தலித் அமைப்புகளும், வேதாரணி யம் மக்களும் மிகுந்த விழிப்புணர் வோடு அம்பேத்கர் சிலைக்குப் பாதுகாப்பாக நின்றனர்.அம்பேத்கர் சிலையை எப்படி யாவது அகற்றிவிட வேண்டும் என்று துடித்த அரசு நிர்வாகம் அடங்கிப் போனது. வியாழன் அன்று கோயில் தேரோட்டமும் வெற்றிகரமாக நடந்தது.டாக்டர் அம்பேத்கர் சிலையை அகற்றக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராடிய மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளருமான நாகைமாலி, வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் கே.ஏ.செங்குட்டு வன், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர்கள் வி.அமிர்த லிங்கம், கோவை.சுப்பிரமணியன், எம்.காத்தமுத்து, ஜி. ஸ்டாலின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.அம்பிகாபதி, ப.சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட சி.பி.எம்.முன்னணித் தலைவர்கள், அம்பேத்கர் சிலையை அகற்றக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து, பல்வேறு போராட்டங் களை நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது.

போராட்டச் செய்திகளை மிக விரிவாகவும், வர்க்க உணர்வோடும் தீக்கதிர் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு இந்த வெற்றியில் பங்குபெற்றிருக்கிறது. வேதாரணியம் மக்களும் டாக்டர் அம்பேத்கர் விசுவாசிகளும் சி.பி.எம்.தலைவர் களுக்கு நன்றியையும் வாழ்த்துக் களையும் தெர்விக்கின்றனர்.- ந.காவியன்

Leave A Reply