நெல்லை,
நெல்லையில் வங்கி கடனை திரும்ப செலுத்த இயலாத விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் மானூரரைச் சேர்ந்தவர் வேம்பு என்ற விவசாயி. இவர் விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துள்ளது. அதனால் பாதி கடன் பாக்கியை வங்கியில் செலுத்தி உள்ளார். மீதி பணத்தை செலுத்த முடியாத அவமானத்தில் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply