மணப்பாறை ,

மணப்பாறையில் உள்ள பட்டாசு கடையில் இன்று ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறையில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பட்டாசு கடை அருகில் உள்ள வீட்டில் இருந்த நாகராணி மற்றும் அவரது மகள் ருக்மணி ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து காரணமாக மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply