மும்பை ,
தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் வரும்  பெரும்பான்மையோர்  விரையில் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என கேப் ஜெமினி தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  நாஸ்காம் வருடாந்தர நிர்வாகிகள் உச்சி மாநாட்டில்  கேப் ஜெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீநிவாஸ் பேசும் போது மேலும் தெரிவித்திருப்பதாவது,
வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைக்கேற்ப தங்களது திறமை மேம்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக தற்போதைய மென்பொறியாளர்கள் பெரும்பான்மையினோர் இருக்கின்றன்ர. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நான் இதை அவநம்பிக்கையுடன் கூறவில்லை. இது மிக சவாலான பணியாக உள்ளது. இங்குள்ள 60-65% ஊழியர்கள் பயிற்சி அளிக்கப்பட முடியாதவர்களாகவே இருப்பதாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
3.9 மில்லியன் தொழில் நுட்ப ஊழியர்கள் மிகவும் தரம் குறைவான பொறியியல் கல்லூரியில் இருந்து படித்து வந்தவர்கள் . லாபத்தை முதன்மையாக கருதி செயல்படும் தொழில் நுட்ப நிறுவனங்கள் , அவர்களின் ஊழியர்கள் திறன் மேம்பாட்டிற்கு போதுமான முதலீடு செய்வதில்லை. தற்போது , குறைவான தரம் உடைய பொறியியல் கல்லூரியில் படிக்குக் மாணவர்களையே பெரும்பாலான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன. இது ஊதிய உயர்வு என்பது பெரும் வித்தியாசத்தில் எதிர்மறையாக மாறி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.2.25 லட்சம் ஆண்டு வருமானம் என்பது தற்போது ரூ.3.5 லட்சமாகவே உயர்ந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக தகவல் தொழில்நுட்பத் துறையை அறிவு சார்ந்த துறை என அழைக்கிறோம். இது போன்ற திறமை இருந்து , ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தொழில்நுட்பத்தை படிக்க செய்தாலே அது ஒரு மிகப்பெரிய சவாலான செயலாக இருக்கும்.
ஊழியர்களாக புதிதாக உள்ளே வரும் மாணவர்கள் , தங்களது இறுதி வருட பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். 80% பொறியியல் பட்டதாரிகள் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
அதனால் எங்களது நிறுவனம் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் . ஏன் என்றால் அவர்கள் புதிய தொழில் நுட்பத்தில் திறன் உடையவர்கள் என்பதாலும் அவர்களுக்கு மிக எளிதாக பயிற்சி அளிக்கலாம் என்பதாலும் அவர்கள் மிக எளிதாக பணியமர்த்தப்படுகிறார்கள் என கூறினார்.
எப்படியோ அதிக வருவாய் ஈட்டக்கூடிய அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வேளியேற்றி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை தேர்நதெடுத்து வேலை வாங்குவதே கார்ப்பரேட் பணிக்கொள்கையாக இருந்து வருகிறது. அதிலும், இளமை காலத்தில் அவர்களிடம் இருந்து அனைத்து திறமைகளையும் உறிஞ்சி அதனை லாபமாக மாற்றிய பின்னர் அவர்களை தூக்கி எறிவது என்பது  ஐடி துறையில் எழுதப்படாத நீதியாக இருந்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.