மன்னார்குடி

பாதுகாப்பான உணவு பொருட்கள் கண்காட்சி உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மன்னார்குடி நகராட்சி சார்பாக பாதுகாப்பான உணவு பொருட்கள் கண்காட்சி உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மன்னார்குடி நகராட்சி சார்பாக செவ்வாயன்று (07.03.2017 ) நியமன அலுவலர் மரு கோ. செல்வராஜ் தலைமையில் மன்னார்குடி தேசிய உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கண்காட்சியில் கலப்படமான வெல்லம், சாயம் ஏற்றப்பட்ட பச்சை பட்டாணி, கலப்படமான டீத்தூள், சாயம் ஏற்றப்பட்ட கலர் வற்றல், கலப்படமான இலவங்கப்பட்டை ஆகியவை கண்டறியும் முறை சம்மந்தப்பட்ட கலப்படமான பொருட்களுடன் விளக்கப்பட்டது. மேற்படி கண்காட்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் க. மணாழகன் (மன்னார்குடி) திரு பால்சாமி, (திருவாரூர்) என். ரெங்கராஜன் (கூத்தாநல்லூர் ) திரு எஸ். குருசாமி (வலங்கைமான்) திரு எஸ். அன்பழகன் ( நீடாமங்கலம்) நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு கோ. இராஜேந்திரன், திரு சு. பிரபாகரன்ஆகியோர் கலந்து கொண்டார்கள். செயற்கை வண்ணங்கள் வெறும் கவர்ச்சிக்காகவும், உணவுப் பொருட்களில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுகள் வெளியே தெரியாமல் இருக்கவும், பழைய உணவுப் பொருட்களுக்கும் வெளியில் தெரியாமல் இருக்க செயற்கை வண்ணம் சேர்க்கப்படுகிறது. இந்த செயற்கை வண்ண வேதிப் பொருட்கள் தார் பெயிண்ட் போன்றவற்றின் வழி பொருட்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் குடலில் செறிக்க முடியாமல் வயிற்று வலி, வயிறு ஒவ்வாமை, தலைவலி என அதிகபட்சமாக குடல் புற்றுநோய் வரை ஏற்படும் எனவும் மென்பானங்களை ( கலர் சோடா) பொறுத்தவரை நொதித்து பொங்க வாசனைக்கு சேர்மானங்கள் ஒட்டாமல் இருக்க மற்றும் கலருக்காக என பல காரணங்களுக்காக 15க்கும் செயற்கை வண்ண வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் நரம்பு பாதிப்பு, கண்பார்வை கோளாறு , பற்சிதைவு போன்றவை ஏற்படும் எனவும் விளக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் சுமார் 1150 மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply