புதுச்சேரி, மார்ச் 5-
வில்லியனூர் கணுவாப் பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். (24). அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் தனுஷ்குமார் (14). இருவரும் சனிக்கிழமையன்று மாலை வீராம்பட்டினம் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். அதே போல் அரியாங்குப்பம் பாரதி நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் (14), நண்பர்களான ராகுல் (14), சூரிய பிரகாஷ் (14), கமேஷ் (14) ஆகியோரும் கடலில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் 6 பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. உடனே இதையறிந்த மீனவர்கள் கடலில் இறங்கி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் யோகேஸ்வரனை தவிர, மற்ற 5 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், கரையில் பரிசோதித்த போது கண்ணன் மூச்சுத் திணறி இறந்து இருப்பது தெரிய வந்தது. மேலும் மாணவன் தனுஷ்குமார் மயக்க நிலையில் இருந்து மீளாததால் அவனை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் யோகேஸ்வரனும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. அவனது உடலை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.