இம்பால் ,

மணிப்பூர் மாநிலத்தில் 38 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

60 சட்ட சபை தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது.  இதில், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கியது. தவுபால் தொகுதியில் அம்மாநில முதல்வர் ஒக்ராம் சிங் இபோபியை எதிர்த்து சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா போட்டியிடுகிறார். மணிப்பூரில் கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் ,பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. 280 மத்திய துணை ராணுவ படையினர் , ராணுவம் , அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகின்ற 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

Leave A Reply

%d bloggers like this: