இம்பால் ,

மணிப்பூர் மாநிலத்தில் அனுமதியின்றி பத்திரிக்கைகளில் தேர்தல் விளம்பரம் செய்த பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இன்று 38 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெறாமல் , வெள்ளியன்று பாஜக நிர்வாகிகள் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இது போன்ற விளம்பரங்கள் செய்வதற்கு முன் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் ஊடக சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இதையடுத்து , தேர்தல் அலுவலர்கள் அளித்த தகவலின் படி , பாஜக நிர்வாகிகள் மற்றும் 8 பத்திரிக்கைகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.