இம்பால் ,

மணிப்பூரில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது.

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை 3.5 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 7.42 மணியளவில் இந்தியா – மியான்மர் எல்லையில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மணிப்பூர் மாநிலத்தில் இன்று சட்டசபைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: