தூத்துக்குடி,

பயிர் கருகியதால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி. இவர் தனது 20 ஏக்கர் நிலத்தில் உளுந்து, மக்காச்சோளம், போன்ற பயிர்களை பயிரிட்டிருந்தார். இந்நிலையில் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் விரக்தியடைந்த நாராயணசாமி இன்று காலை வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply