பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மினி பேருந்து மோதியதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராமன். இவர் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் வியாழனன்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டு திரும்பும் போது மினிப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மினி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

vestathemes

Leave A Reply