புதுதில்லி,
மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்பில் கூடுதலாக 4 ஆயிரம் இடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ முதுநிலை பாடப்பிரிவில் கூடுதலாக 4 ஆயிரம் இடங்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2017 – 18 ம் கல்வியாண்டு முதல் மருத்துவ முதுநிலை படிப்பிற்கான இடங்கள் 35 ஆயிரத்து 117 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே 71 தனியார் மருத்துவக் கல்லூகள் கூடுதலாக ஆயிரத்து 137 இடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர். 212 அரசு மருத்துவக்கல்லூரிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்திருக்கின்றன. இந்த இடங்களை வரும் மார்ச் மாதம் முதல் அனுமதியளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி நாடா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் ஆசிரியர் விகிதம் குறித்து ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன் படி ஒரு பேராசிரியருக்கு கீழ் 3 மாணவர்களும்(1:3) , ஒரு இணைப்பேராசிரியர்க்கு கீழ் 2 மாணவர்கள் (1:2) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: