திருவனந்தபுரம் ,

கடந்த வருடம் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு மேம்பாடு , சமூக நல நடவடிக்கைகள் வலுப்படுத்தல் , பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரித்தல்  கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

2017-18 ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ.93,584.74 கோடி , மொத்த செலவு ரூ.10,96,27.88 கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் , கட்டுமான மேம்பாட்டிற்காக ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது கேரள மாநில வரலாற்றிலேயே மிக அதிகமான தொகையாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பயனுள்ள பாதுகாப்பான முதலீடாக இது இருக்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள 128 சாலைகளை அமைக்கவும் , சீரமைக்கவும் மொத்தமாக ரூ.5628 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்றவாறு , அரசு பள்ளிகளை மேம்படுத்த பல வித திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணையதள சேவை வழங்கப்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தால் , அத்தியாவசிய பொருட்களில் முக்கியமாக அரிசியின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதையடுத்து ரேஷன் பொருட்களுக்கு மானியம் வழங்க ரூ.900 கோடியும் , நெல் கொள்முதல் செய்ய ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திறந்த வெளி சந்தைகளை ஒழுங்குபடுத்தி விலை உயர்வு குறித்து கண்காணிக்க ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில நிதி நிறுவனம் , என்.ஆர்.ஐ.கள் மூலமாக பெறப்படும் நிதி மூலமாக , ரூ.10,000 கோடியில் கடலோர மற்றும் அதி நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

ஓய்வூதியம் ரூ.500ல் இருந்து ரூ.2000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005-06 முதல் 2010-11 முதல் வரி தொகை செலுத்தாதவர்களும் புது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரப்பர் வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் இயற்கை ரப்பர் மற்றும் அதன் வகைகளுக்கு டிசம்பர் 20, 2014- மார்ச் 31, 2015 வரையிலான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அக்‌ஷய் உர்ஜா திட்டத்தை ஊக்குவிக்க சோலார் சாதனங்களை நிறுவ 1% வரி மட்டுமே போடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

மூன்று மணி நேரம் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது எதிர்க் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா , சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே ஊடகங்களில் பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளிவந்துவிட்டது என கூறினார்.  இதற்கு பதிலளித்து  பேசிய அம்மாநில முதல் பினராயி விஜயன் , பட்ஜெட் கசிய கண்டிப்பாக வாய்ப்பில்லை. ஆனால் எதிர் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், இது தீவிரமான பிரச்சனை . கண்டிப்பாக இது குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

Leave A Reply