சென்னை,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு உதவியுடன் கூடிய இலவசத் திறன் பயிற்சிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்பட உள்ளன.
சென்னை, மாவட்ட (பொது) வேலைவாய்ப்பு அலுவலகத்தால் மருந்து விற்பனை பிரதிநிதி பணிக்கான வேலைவாய்ப்பு உதவியுடன் கூடிய திறன்பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள B.Pharmacy, D.Pharmacy,B.Sc.Zoology, B.Sc.Chemistry, B.Sc.Bio-Chemistry அளைவசல மற்றும் பிற இளங்கலை அறிவியல் முடித்த 26 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மார்ச் 7மற்றும் 8 ஆகிய தினங்களில் அலுவலக நேரங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம், சென்னை-4 அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.