கொல்கத்தா, மார்ச் 1-
மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூகி சவுத்ரிக்கு குழந்தைகள் கடத்தலில் உள்ள தொடர்பு குறித்து புதிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிஸ்கட்கொண்டு செல்லும் பெட்டிகள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை கண்டுபிடித்த சிஐடி போலீசார், இதுதொடர்பாக தனியார் தொண்டு நிறுவன தலைவர் சந்தானா சக்கரபோர்த்தி மற்றும் அவரது உதவியாளரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகள் காப்ப
கம் நடத்துவதற்கான உரிமத்தை பாஜக தலைவியான ஜூகி சவுத்ரி பெற்று தந்தது தெரியவந்தது.

அந்த காப்பகத்தில் இருந்து 17 குழந்தைகள் விற்கப் பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதனன்று கைது செய்யப்பட்டார்.

பாஜக மேலவை உறுப்பினர் ரூபா கங்குலி மூலம் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய வர்கியாவை ஜூகி சவுத்ரி தொடர்பு கொண்டு காப்பகம் நடத்துவதற்கான உரிமம் நீட்டிப்பு பெற முயற்சி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், மருத்துவர்கள் மற்றும் தொழிலதி
பர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பாஜக மேலவை உறுப்பினர் ரூபா கங்குலி, தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்டோருக்கு தொடர் இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், சிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே தலைமறைவான மேற்குவங்க மாநில பாஜக பொதுச்செயலாளர் ஜூகி சவுத்ரியை இந்திய – நேபாள எல்லையில் சிஐடி போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply