மன்னார்குடி
சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி புதன்கிழமை நெடுவாசலில் இருந்து மன்னார்குடி வழியாக சென்னை சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில் மன்னார்குடி தேரடி வந்தபோது அதிமுக அலுவலத்திற்கு எதிர்புறமும் தேரடியிலும் சசிகலா ஜெயலலிதா கட்டவுட் ப்ளக்ஸ் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை புகைப்படம் எடுத்த ராமசாமி இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த இத்தட்டிகளை நீங்கள் எடுக்கிறீர்களா அல்லது நான் எடுக்கட்டுமா என காவல் துறையினரிடம் அவர் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது அங்கு வந்த அதிமுகவினருக்கும் அவருக்கும் காவல்துறையினர் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அதிமுக பொறுப்பாளர்கள் எஸ்.காமராஜ், மாதவன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்தனர். பின்னர் காவல்துறையினர் சமாதானம் செய்து ட்ராபிக் ராமசாமியை சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தி கும்பகோணம் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply