17 வயதுக்கு உள்பட்டோருக்கான கோப்பை கால்பந்துப் போட்டிகள் முதன்முதலாக  இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணை, ஜூலை மாதம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணிக்கு, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்ட்டன் டி மடோஸ், 35 ஆண்டுகாலம் கால்பந்து விளையாடியுள்ளார். அவரது அனுபவத்தின் அடிப்படையில் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
63 வயதாகும் லூயிஸ் போர்ச்சுக்கல் தேசிய அணியில் முன்கள வீரராக விளையாடியுள்ளார். 1972 ஆம் ஆண்டு கால்பந்து விளை யாட்டில் கால்பதித்த அவர்,1987ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, கிளப் அணிகளுக்கு பயிற்சியாளரானார்.

Leave a Reply

You must be logged in to post a comment.