கூடலூர்: கூடலூர் பகுதியில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஓடைப்படி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அரசு பணியில் இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் அவர் புதனன்று தேனி மாவட்டம் கூடலூர் லேயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் காவலர் சீருடையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த லேயர் கேம்ப் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply