இடாநகர், மார்ச் 1-
அருணாச்சல் முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் தற்கொலை விவகாரத்தில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை விசாரிக்க வேண்டும் என்று கலிக்கோ புல்லின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்து பதவி விலகிய கலிக்கோ புல், இடாநகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் 60 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலிக்கோ புல் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற த்தில் கடந்த வாரம் வழக்குத் தொடர்ந்த அவரது மனைவிடாங்விம்சாய் புல், திடீர் திருப்பமாக, உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி யை சந்தித்து மனு அளித்த கலிக்கோ புல்லின் மனைவி, சிறப்பு புலனா ய்வுக்குழு மூலம் நேர்மையானவிசாரணையை நடத்த வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார். கலிக்கோ புல்லின் 60 பக்க தற்கொலை கடிதத்தில், அரசியல் வாதிகள், நீதிபதிகளின் ஊழல் பற்றி குறிப்பிட்டு இருந்ததாகவும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிரான தகவல்கள் இருப்பதாகவும் டாங்விம்சாய்புல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.