நெல்லை: நெல்லையில் விசாரணை கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கடந்த 24 தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த விசாரணை கைதி சிங்காரம் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். அப்போது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் காவல்துறையினர் மீது மிளகாய் பொடி தூவி சிங்காரத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொலையாளிகள் சிங்காரத்தை வெட்டிவிட்டு தப்பி ஓடும் காட்சியும், உயிருக்கு பயந்து காவல்துறையினர் ஒடி தப்பிய காட்சியும் பதிவாகியுள்ளது.

Leave A Reply