கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply