திருச்சி: ஏலச்சீட்டு நடத்தி ரூ.200 மோடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீட்டுமனை சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தது ஜி.எம்.ஜி ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்த நிறுவனத்தில் 200க்கும் அதிகமான மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலச்சீட்டு எடுக்க அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்றதாக கூறப்படுகின்றது. ஆனால் ஜி.எம்.ஜி ரியல் எஸ்டேட் நிறுவனம் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் 200 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளனர்.

Leave A Reply