இம்பால், பிப்.26-
பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 60 சட்டசபை தொகுதி களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 25 ஆம் தேதியன்று பாஜகவின் சார்பில் மாநில தலைநகர் இம்பாலில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரு வதற்கு பழங்குடியின மக்களின் அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன. பழங்குடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஆறு அரசியல் இயக்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத் திருந்தன.

இதனால் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு போராட்ட ங்களும் நடைபெற்றுள்ளன. தலைநகர் இம்பால் நகரை பொறுத்தளவில் நூறு சதவீதம் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்கள்செயல்படவில்லை. காவல்துறை வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பொதுபோக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தலைநகர் இம்பாலில் மட்டும் 5000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். இதனால் திட்டமிட்ட அடிப்படையில் பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பொதுக் கூட்டத்திற்கு பாஜகவினர் திரண்டி ருந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.