கவுகாத்தி, பிப். 25 –

நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயிலிங் தற்போது அம்மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, நாகாலாந்து முதலமைச்சர் ஜெலியாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் லேஜேட்சு சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு , பிப்.22ம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரான ஜெலியாங்கை அம்மாநில நிதி ஆலோசகராக ஆளுநர் ஆச்சார்யா நியமித்துள்ளார். ஜெலியாங்கிற்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது போல சம்பளம் , மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: