கோவில்பட்டி, பிப்.22-
வெளிநாட்டு குளிர் பானங்களை புறக்கணித்து உள்ளூர் குளிர் பானங்களை ஆதரிக்க வேண்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோவில்பட்டியில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான கோக்,பெப்ஸி போன்ற மென் பானங்களில் பூச்சிக்கொல்லிகள் கலக்கப்பட் டுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்று பல ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. மருத்துவ ரீதியாகவும் நிரூபிக் கப்பட்டுள்ளது. கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்கள் இந்தியாவில் நுழைந்தபிறகு உள் நாட்டு குளிர்பானங்களின் தயாரிப்பு முற்றிலும் அழிக்கப்பட்டதால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மென் பானங்களின் தயாரிப்புகளுக்காக நாட்டில் பல இடங்களில் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி குடிநீர் தட்டுப் பாடும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து உள்ளூர் தொழில் – வணிகத்தை முற்றிலும் அழித்து, நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி வரும் நிலையை மாற்றிட மார்ச் 1ஆம் தேதி முதல் கோக், பெப்ஸி, குளிர்பானங்களை கடைகளில் விற்க மாட்டோம் என்றும், எந்த கடைகளிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் முடிவு செய்துள் ளனர்.இதையடுத்து, இதேகோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவில் பட்டி பயணியர் விடுதி முன்பு கோக், பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களுக்கு மாலை அணிவித்து, அந்தபாட்டிலில் உள்ள குளிர்பானங்களை தரையில் ஊற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்,வெளிநாட்டு குளிர்பானங் களை புறக்கணித்து உள் ளூர் குளிர்பானங்களை ஆதரிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பேரமைப்பின் தலைவர் பன்னீர்செல் வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சேதுரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தொழிலதிபர்கள் வெங்கடேஸ்வரன், ஜெகதீஷ், தங்கராஜ், ஜெயராஜ், முத்துராஜன், ஆறுமுகச் சாமி உள்பட பேரமைப்பின் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.