புதுதில்லி, பிப். 22 –
மனநிலை பாதிப்படைந்து முழுவதும் குணமடைந்தவர்களின் மறுவாழ்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட வர்களின் குடும்பத்தினரே முன்வருவதில்லை என்ற கவலையையும் நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்ற ஒரு நபரை, சிகிச்சை முடிந்தபின் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஒருவரும் முன்வருவதில்லை; இவ்விவகாரம் பற்றி மத்திய அரசு யோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இது மிக, மிக உணர்வுப்பூர்வமிக்க விவகாரம். மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், மக்கள் வாழும் சமூகத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்; அதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும். இது மிக எளிதில் செய்யக் கூடிய ஒன்றே. மத்திய அரசு அதுமாதிரி திட்டமொன்றி னை எங்களிடம் அளித்தால், நாங்கள் மாநில அரசுகளிடம் அதனை அளித்து விவரம் கேட்போம். மத்திய அரசு இதனை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் கூறுகையில், உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டும் விஷயத் தில் சுகாதார அமைச்சகம் மற்றும் சமூக நீதி அமைச்சகம் ஆகியவை ஈடுபட வேண்டிய நிலையில் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு 8 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.