என் துப்பட்டா
ஏழு வயது மகளின்
சேலையாக மாறுகிற வேளையில்
அந்த மழலையின் முகத்தில்
இருக்கும் வெட்கப் புன்னகைக்கு பின்னால்
ஹாசினியும் ரித்திகாவும் சத்தம் இல்லாமல்
ஒரு கணம் என் மனதை உலுக்கி மறைகின்றனர்.
-எம்.பாண்டீஸ்வரி

Leave a Reply

You must be logged in to post a comment.