கவுகாத்தி , பிப். 22 –

நாகலாந்து மாநிலத்தின் முதலமைச்சராக ஷூரோசெலி லெய்சிட்ஷூ(81) இன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாகலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, நாகலாந்து முதலமைச்சர் ஜெலியாங் திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஷூரோசெலி லெய்சிட்ஷூ சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார் . இதை தொடர்ந்து ஷூரோசெலி லெய்சிட்ஷூ இன்று நாகலாந்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் , ஆளுநர் ஆச்சார்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: