தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் புதன்கிழமை(பிப்.23) நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டெய்லர் சதம் அடித்தார். இது அவருக்கு 17ஆவது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் அம்லா சொற்ப ரன்களில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 57 ரன்கள் அடித்தார். கேப்டன் டிவில்லியர்ஸ் 45 ரன்களும், டுமிடினி 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரிட்டோரியஸ் அவுட்டானதும் அந்த அணியின் வெற்றி வாய்ப்பும் பறி போனது. அவர் 50 ரன்கள் எடுத்தார். இறுதி யாக 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.