திருச்சி, பிப். 22-
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட் டத் தலைநகரங்களில் புதனன்று (பிப். 22) திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் எதிர்க் கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கே.என். நேரு உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தன.சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான பிப்ரவரி 18-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை, ரகசிய
வாக்கெடுப்பாக நடத்துமாறு திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்காததால், பேரவையில் அமளியைத் தொடர்ந்து எண்ணிக்கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பழனிசாமி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply