இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவந்துள்ளது. தொடர்ந்து தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் சாதனை ஆஸ்திரேலிய தொடரிலும் தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் கோலியின் அதிரடி மற்றும் ரன்வேட்டை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடரும் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், ரன் வேட்டைக்கு இளம் வீரர்கள் ராகுல், புஜாரா, ரகானே, விருத்திமான் சகா, ஜெயந்த் யாதவ், கருண் நாயர் என பலரும் உள்ளனர். பந்து வீச்சை பொருத்தமட்டில் அஸ்வின்- ஜடேஜா சுழலில் ஆதிக்கம் செலுத்துவார்கள். வேகத்திற்கு புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் கூடுதல் பலம் சேர்ப்பார்கள். ஆஸ்திரேலிய அணியும் சமபலத்துடன் வந்துள்ளது. கேப்டன் சுமித், தொடக்க வீரர் வார்னர், மேக்ஸ்வெல், மார்ஷ் சகோதரர்கள், ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன், குவாஜா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே, இந்த இரண்டு அணிகளும் தங்களது முழுமையான திறமை வெளிப்படுத்தும். இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவது வீரர்களுக்கு கூடுதல் பலமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.