திருச்சி: லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்சி கலைகாவேரி கல்லூரி  செயலாளர் சகாயராஜ் உயிரிழந்தார்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருமாந்துறை புறவழிச்சாலையில் எறையூர் சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது. இங்குள்ள லாரி ஒன்று டீசல் போட தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கலைகாவேரி கல்லூரி செயலாளர் சகாயராஜின் கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் சகாயராஜ் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி உயிரிழந்தார்.மேலும் இவருடன் காரில் இருந்த கார் ஓட்டுநர் ரமேஷ் மற்றும் சகாயராஜின் உதவியாளர் மீரா இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து  அவர்களை மீட்டு பொது மக்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: