ஜெய்பூர்: கோட்டா மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினரின் கணவர் அடியாள்களுடன் தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரகன்தா மெக்வால். இவரது கணவர் நரேஷ் மெக்வால். இதில் நரேஷ் மெக்வாலாவிற்கு திங்களன்று போக்குவரத்து காவல்துறையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் காவல்துறையிரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் பாஜகவினருடன் சேர்ந்து சென்ற அபராதம் விதித்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறை அதிகாரி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளனர். இதனை தடுக்க வந்த காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர் காவல்துறையினரை தாக்கிய பாஜக குண்டர்கள் மீது தடியடி நடத்தியதுடன் சட்டமன்ற உறுப்பினரின் கணவர் மற்றும் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட காவல்துறையினரை பணிமாற்றம் செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: