நீலகிரி: உதகை அருகே கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறையினர் மீட்டு கடத்திய பெண்ணை கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள காந்தள் பகுதியில் வசித்து வந்த ரியாஸ்-ராபியா தம்பதியினரின் 9- மாத பெண் குழந்தையை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெண் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அது கடத்தப்பட்ட குழந்தை என்று தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தையை கைப்பற்றி காவல்துறையினர் அங்கிருந்த பெணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையை கடத்திய பெண் பவுசிய(32) என்றும், பெண் குழந்தை அழகாய் இருந்ததால் வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீட்கப்பட்ட குழந்தையை காவல்துறையினர் ரியாஸ்-ராபியாவிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தை கடத்தல் கும்பலிடம் அந்த பெண்ணுக்கு தொடர்புள்ளதா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: