பெங்களூரு: இறந்து விட்டார் என கருதி இறுதிச்சடங்கு நடத்தும் போது எழுந்து வந்த இளைஞரை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள மானாகண்டி என்ற பகுதியை சேர்ந்தவர் குமார் மார்வாத்(17). இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது. இதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்த நிலையில், இவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவரை காப்பாற்ற முடியாது எனவும் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படியும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குமார் மார்வாத் எவ்வித அசைவுமின்றி கிடந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவர் இறந்து விட்டதாக கருதி அவருக்கு இறுதிச்சடங்கிற்கான வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மயானம் அருகே சென்ற போது குமார் மார்வாத் திடீரென கண்விழித்து எழுந்துள்ளார். இதனை கண்டு பொது மக்கள் பீதியில் அலறி அடித்தபடி ஓட துவங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பொது மக்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

%d bloggers like this: