சண்டிகர்: பஞ்சாப்பின் எல்லையில் உள்ள பகுதிகளில் போதைப் புழக்கமும், அதையொட்டி குழந்தைகள் உயிரிழப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு, பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைகளில் இருந்து ஒரு வயது குழந்தைவரை அதிக இறப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பெரும்பாலான குழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், இறப்புக்கு காரணம் அப்பகுதியில் அதிகரித்துள்ள போதை மருந்து புழக்கம் என பஞ்சாப் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் சுகாதாரத் துறை அறிக்கையின்படி, குழந்தைகள் பிறப்பதில் குறைவான அளவு சிக்கல் இருந்தாலும், அவை குறுகிய காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எய்ம்ஸ் மற்றும் தில்லி தேசிய போதைப் பொருள் சிகிச்சை மையம் இணைந்து நடத்திய ஆய்வில், பஞ்சாப்பின் மக்கள்தொகை 2.27கோடியில் கடந்த ஆண்டு சுமார் 2.3 லட்சம் பேர் ஒபியம் போதைப் பொருள் பழக்கத்துக்கும்,1 கோடி பேர் ஹெராயின் பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.              மேலும் சமீபத்திய தகவல்படி, கடந்த ஓராண்டில் அமிர்தசரஸில் 973 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், அதனைச் சுற்றியுள்ள குர்தாஸ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 356 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது. இந்த இறப்புகள் குறித்த தகவல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்தலில் பிற நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் சுகாதாரத்துறை மற்றும் போதைத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.