தீக்கதிர்

நாகலாந்து : சட்டமன்ற தலைவராக லேஜேட்சு தேர்வு

கவுகாத்தி, பிப். 20 –

நாகலாந்து சட்டமன்ற தலைவராக நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் லேஜேட்சு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாகலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, நாகலாந்து முதலமைச்சர் ஜெலியாங்  தனது முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார். இதையடுத்து நாகாலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் லேஜேட்சு சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வருக் பிப்.22ம் தேதி அவர் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்பார் என அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.