சென்னை,
தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படுவது உட்பட 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டுள்ளார். மேலும்
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பெறு உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்வு;
பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டமத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை இரண்டு மடங்காக அதிகரிப்பு
மீனவர்களுக்கு 5000 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.85 கோடி ஒதுக்கீடு ஆகிய 5 முக்கிய திட்டங்களில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கடந்த 2016ம்ஆண்டு சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா 500மதுக்கடைகளை மூடியதோடு கடைகளின் நேரங்களையும் மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: